கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்

லூதியானா: கடந்த 2014ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் போகா கிராமத்தில் இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றிருந்தார். போகா கிராமத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கும்பல் ஒன்று அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரது கார் மீது கல்வீசித் தாக்கியது. அதில் கெஜ்ரிவால் காயமின்றித் தப்பினார். ஆனால், கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. எனவே, அங்கு பாதுகாப்புக்காக மேலும் போலிசார் குவிக்கப்பட்டனர். இந்தத் தகவலை கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.