வைகோ துணை முதல்வர்: தேமுதிக உறுதி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெற்றால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோ வில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்தக் கூட் டணியின் பிரசாரக் கூட்டத்தில் தேமுதிக இளையரணித் தலைவர் சுதீஷ் இந்த உறுதிமொழியை தெரிவித்தார்.

வைகோ முன்னிலையில் இதனை அறிவித்த சுதீஷ், மக்கள் நலக் கூட்டணியின் பிற தலை வர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தெரி வித்தார். சுதீஷ் பேசுகையில், "தற்போது அமைந்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது மிகுந்த பாசமும் பற்றும் கொண்டவன் நான். அவர் திமுகவில் இருந்து வெளியேறியபோது நான் கல்லூரி யில் படித்துக்கொண்டிருந்தேன். அவரது மேடைப் பேச்சுகளை ரசித்துக் கேட்பேன். "வருகிற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராவது உறுதி. மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் அந்த அமைச்சரவையில் துணை முதல்வராக மதிமுக பொதுச்செய லாளர் வைகோ பொறுப்பேற்பார்.

இது உறுதியான முடிவு. அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவள வன் கல்வி அமைச்சராகவும் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் உள்ளாட்சி அமைச்சரா கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நிதி அமைச்சராகவும் பதவி ஏற் பார்கள்," என்றார் சுதீஷ். தொடர்ந்து பேசிய வைகோ, துணை முதல்வர் பதவி பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. விஜய காந்த் முதல்வர் ஆனதும் விடியல் பிறக்கும் என்று அவர் பேசினார். ஆனால், இக்கூட்டத்தில் பேசிய முத்தரசனும் திருமாவளவனும் தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான் என்றும் ஒரு கட்சி ஆட்சி முறை இருக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!