மின்துறை அமைச்சருக்கு தமிழிசை பதிலடி

சென்னை: தமிழக அரசு மீது குற்றம் சாட்டுவதற்கு மத்திய அமைச்சருக்கு உரிமை இருக்கிறது என தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது மின் தடை இல்லாததற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து கூடுதலாக தென் மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதே காரணம் என அவர் செய்தியாளர்களிடம் பேசு கையில் குறிப்பிட்டார். "தமிழக முதல்வரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் இருவரும் இதற்குப் பதில ளித்திருக்கிறார்கள். நத்தம் விஸ்வநாதனுக்கு தற்போதுதான், தாம் தமிழக மின்துறை அமைச்சர் என்பதே நினைவுக்கு வருகிறது," என்று தமிழிசை கூறியுள்ளார்.

நாட்டிலேயே அதிக கடன் கொண்ட மின் வாரியமாக தமிழக மின்சார வாரியம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் கடனைச் சரி செய்ய மத்திய அரசு தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கியதாகச் சுட்டிக்காட்டினார். வெள்ளத்தின்போது தமிழகம் இருளில் மூழ்கிவிடாதபடி மத்திய மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்கியதாகத் தெரிவித்த அவர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மத்திய தொகுப்பிலிருந்து தமிழ கத்துக்கு மின்சாரம் கிடைப்பது அரிதாக இருந்தது என்றார். "அதிமுக ஆட்சியில் தமிழ கத்தில் மின்வெட்டே இல்லை எனக் கூறுகிறார்கள். என்ன புதிய திட்டம் கொண்டு வந்தி ருக்கிறார்கள்? கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்ய புதிய நிலையங்கள் ஏதும் அமைக்கப்பட்டிருக்கிறதா? என்று தமிழக அரசு கூறட்டும்" என்றும் தமிழிசை சௌந்தரராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!