கிரானைட் முறைகேடு: புகாரில் சிக்கிய நீதிபதியிடம் விசாரணை

மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி யாகக் குற்றம்சாட்டப்பட்ட பி.ஆர்.பழனிச்சாமியை குறிப்பிட்ட இரு வழக்குகளில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார் மேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி. இதையடுத்து அவர் பி.ஆர்.பி நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் மேலூர் காவல்துறை அதிகாரி பரமசிவமும் மகேந்திர பூபதி மீது புகார் தெரிவித்து மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இம்மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியிடம் விசாரணை நடத்துமாறு மதுரை மாவட்ட நீதிபதி பசீர் அகமது, துணை நீதிபதி சரவணன் ஆகிய இருவருக்கும் உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று மகேந்திர பூபதியிடம் இரு நீதிபதிகளும் விசாரணை நடத்தினர். இதனால் நீதித்துறை வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!