தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: தேமுதிக - மநகூ மல்லுக்கட்டு

வலைமேல் வலை வீசி ஒருவழி யாக விஜயகாந்தின் தேமுதிக வைத் தன்பக்கம் கொண்டுவந்த மக்கள் நலக் கூட்டணி (மநகூ) இப்போது கையைப் பிசைந்து வருகிறது. தேமுதிக வந்ததும் இனி அக்கூட்டணி 'கேப்டன் விஜயகாந்த் அணி' என அழைக்கப்படும் என குரல்கள் கிளம்ப, அதை ஏற்க இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மறுத்தனர். இதை அடுத்து, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி என்று அழைக்கலாம் என்று சொல்லி, அந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டது. இந்த நிலையில், அந்தக் கூட்டணியில் அடுத்த தலைவலி ஆரம்பமாகியுள்ளது. தேமுதிக 124 தொகுதிகளிலும் மநகூ கட்சிகள் 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு விட்டாலும் எந்தத் தொகுதிகளில் யார் போட்டி யிடுவது என்பதுதான் இப்போ தைய பிரச்சினை.

இதன் தொடர்பில், வைகோ, முத்தரசன், திருமாவளவன் ஆகிய மநகூ தலைவர்கள் நேற்று முன்தினம் தேமுதிக அலுவலகத்திற்கே நேரில் சென்று விஜய காந்தைச் சந்தித்தனர். அப் போது தாங்கள் போட்டியிட விரும்பும் 110 தொகுதிகளுக் கான பட்டியலை விஜயகாந்திடம் அவர்கள் தந்தனர். அந்தப் பட்டியலில் இருக்கும் 70 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இருந்தாலும், அவற்றில் பத்து தொகுதிகளை, குறிப்பாக தென் தமிழகத்தில் வேண்டுமானால் விட்டுத் தரத் தயார் என்று விஜயகாந்த் திட்டவட்டமாகக் கூறியதாகத் தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைக் கேட்டு மநகூ தலைவர்கள் அதிர்ந்து போயினர் என்றும் பட்டியலில் உள்ள வட மாவட்டத் தொகுதிகள் முப்பதை யும் தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்திய தாகவும் கூறப்பட்டது. ஆனால், கட்சியினருடன் கூடி ஆலோ சித்தபின்பே பதில் கூறமுடியும் என்று விஜயகாந்த் சொன்னதால் அவர் ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தைப் புறக்கணித்து மநகூ தலைவர்கள் வெளியேறிய தாகவும் சொல்லப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!