விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டியில் பிரேமலதா

தமிழ்­நாட்­டின் வரும் சட்­ட­மன்றத் தேர்தல் பெண்­களின் பலத்­துக்­குப் பலப்­ப­ரீட்சை­யாக அமைந்­துள்­ளது. நடிகர் விஜ­ய­காந்த் 2005 செப்­டம்ப­ரில் தேமுதிக கட்­சியைத் தொடங்­கி­ய­தில் இருந்து அவ­ருக்­கும் கட்­சிக்­கும் பக்­க­ப­ல­மா­கத் திகழ்ந்து வந்த பிரே­ம­லதா, இந்தத் தேர்­த­லில் நேர­டி­யா­கக் கள­மி­றங்க­வுள்­ளார். விஜ­ய­காந்த் தமது ரசி­கர்­ மன்றங்களைக் கட்­சி­யாக வளர்த்து, தமிழ்­நாட்­டின் முக்கிய கட்­சி­களுக்கு மிரட்­ட­லாக உரு­வெ­டுக்க முக்கிய பங்காற்­றி­ய­வர் இரு மகன்களுக்­குத் தாயான பிரே­ம­லதா.

தேமுதிக மேடை­களில் முன்­ன­ணி­யில் இருப்­ப­வர் கட்­சி­யின் மகளிர் அணி செய­லா­ள­ரு­மான பிரே­ம­ல­தா­தான். அவர் திமுக, அதி­மு­கவை கார­சா­ர­மாக விமர்­சித்து வரு­கிறார். தேமுதிக எம்.எல்.ஏ.க்கள், மாவட்­டச் செய­லா­ளர்­களை திமு­க­வுக்கு இழுக்­கும் வகையில் திமுக பொரு­ளா­ளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வரு­கிறார் என்று சனிக்­கிழமை சேலத்­தில் பேசிய பிரே­ம­லதா குற்றம் சாட்­டினார்.

இதற்­கிடையே, சேலத்­தில் பிரே­ம­லதா தங்­கி­யுள்ள தனியார் ஹோட்டலை அதி­முகவி­னர் நேற்று முற்­றுகை­யிட்­டுப் போராட்­டம் நடத்­தி­னர். முதல்­வர் ஜெய­ல­லிதா குறித்து அவர் அவ­தூ­றாக பேசி­வ­ரு­வ­தா­க­வும் அதற்கு கண்ட­னம் தெரி­விக்­கும் விதமாகவும் இந்த முற்றுகை போராட்­டத்தை நடத்­தி­யுள்­ள­னர். எத்தனை எதிர்ப்­பு­கள் வந்த­போது இந்தத் தேர்­த­லில் ஒருகை பார்த்­து­வி­டு­வது என்ற உறு­தி­யு­டன் கள­மி­றங்­கி­யுள்­ளார் பிரே­ம­லதா. அவரது சொந்த ஊர் வேலூர் என்ற­போ­தும் விழுப்­பு­ரம் அல்லது விக்­கி­ர­வாண்டி தொகு­தி­யில் அவர் போட்­டி­யிட வாய்ப்­புள்­ள­தாக கூறப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!