ராமகிருஷ்ணன்: பிரசாரத்தை தடுக்கும் அதிமுகவின் வன்முறை

சென்னை: எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தை தடுக்கும் வகையில் அதிமுகவினர் வன் முறைச் செயல்களில் ஈடுபடு வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ் ணன் விடுத்துள்ள அறிக்கையில், பிரேமலதா விஜயகாந்த் தங்கி யிருந்த தங்கு விடுதி முன்பு அதிமுகவினர் ரகளையில் ஈடுபட் டதை வன்மையாகக் கண்டிப்ப தாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் சேலத்தில் தேர் தல் பிரசாரம் மேற்கொண்ட பிரேம லதா, வழக்கம்போல் அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித் தார். இதையடுத்து அவர் தங்கி யிருந்த தங்கு விடுதி முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். "பிரசாரத்துக்காக சேலம் சென்றிருந்த தேமுதிக மகளி ரணித் தலைவி பிரேமலதா விஜய காந்த், அங்குள்ள தங்குவிடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.

தாதகாப் பட்டியில் கடந்த 2ஆம் தேதி நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, திமுகவையும் அதிமுகவையும் விமர்சித்தார். "ஆனால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவினர் சிலர், பிரேமலதா தங்கியிருந்த விடுதிக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது ஜன நாயக அரசியலுக்கும் தேர்தல் நடைமுறை விதிகளுக்கும் எதிரானது," என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!