வைகோ: தேமுதிகவை உடைக்க தொடர்ந்து முயற்சி

மதுரை: தேமுதிகவை அழிக்க வேண்டும் என்பதற்காக திமுக தலைமை சதி வேலையில் ஈடுபட்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா வில் அதிகாரிகள் சோதனை நடத்தத் தவறியதால் அங்கு கொள்கலன்களில் பதுக்கப்பட்ட பெருமளவு பணம் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். கூட்டணி சேர மறுத்த காரணத்தினால் தேமுதிக மீது திமுக தலைமை கடும் ஆத்திரத் தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் அனைத் துமே பொய்யானவை என்றார்.

"இக்கணிப்புகளின் பின்னணி யில் திமுகவும் அதிமுகவும் உள் ளன. கூட்டணிக்கு வராத கட்சிகளை வளைக்கும் தந்திரம் இது. உண்மையில் அதிமுக, திமுகவின் வாக்கு வங்கி குறைந் துள்ளது," என்றார் வைகோ. திமுக கூட்டணியில் மதிமுக சேர மறுத்தபோது முக்கிய நிர் வாகிகளை இழுத்து மதிமுகவை அழிக்க திமுக முயற்சி செய்த தாகச் சாடிய அவர், சிலர் விலகிச் சென்றதால் மதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றார். "தேமுதிக நிர்வாகிகளை இழுத்து அக்கட்சியை அழிக்க முயற்சி செய்கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!