ஊழலுக்கு உதவாதோரை பாடாய்ப்படுத்தும் ஜெயா - பழ.கருப்பையா

நெல்லை: அதிமுக ஆட்சி நிச்சயம் அழிந்து போகும் என முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆவேசத்துடன் குறிப்பிட்டார். ஊழலுக்கு துணைபோகாத அதிகாரிகளை ஜெயலலிதா பாடாய்ப் படுத்திவிடுவார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். "ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட அரசு அதிகாரி முத்துக்குமாரசாமியின் மனைவியின் சாபம் அதிமுக ஆட்சியை சும்மா விடாது. கண்ணகி யின் சாபத் தீயால் எப்படி பாண்டிய மன்னன் அழிந்தானோ அதேபோல் முத்துகுமாரசாமி மனைவியின் சாபத்தால் அதிமுக ஆட்சி அழிந்துவிடும்.

எப்படி கண்ணகிக்கு தெய்வம் துணை நின்றதோ அதேபோல் சுவாமி நெல்லையப்பர் கண்டிப்பாக மே மாதம் 16ஆம் தேதி மக்கள் வடிவில் வந்து அதிமுக ஆட்சிக்கு தண்டனை வழங்குவார்," என்றார் பழ.கருப்பையா. ஜெயலலிதாவின் ஊழலுக்கு துணை போகாத காரணத்தால் தான் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் 3 நாட்களில் 3 வெவ்வேறு துறை களுக்கு மாற்றப்பட்டதாகக் குறிப் பிட்ட அவர், ஊழலுக்கு துணை போகாத அரசு அதிகாரிகள் பாடு அதிமுக ஆட்சியில் திண்டாட்டம் தான் என்றார்.

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் ஊழலுக்கு நெல்லை வேளாண்மை துறை பொறியாளர் முத்துகுமாரசாமி துணை நிற்க மறுத்ததாகத் தெரிவித்த அவர், வேறு வழியின்றியே முத்துக்குமாரசாமி ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!