மு.க.ஸ்டாலின்: தமிழகத்திற்கு நிச்சயம் விடியல் வரும்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் வழி தமிழகத்திற்கு நிச்சயமாக விடியல் வரும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவினர் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். "தமிழகத்தில் செயலற்ற ஆட்சி, நிர்வாகம் நிலைகுத்திப் போன ஆட்சி நடைபெறுகிறது.

இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற மக்கள் உறுதி பூண்டு இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா பொது மக்களைச் சந்தித்தது உண்டா?" என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின். திமுகவினர் தினமும் வீடு வீடாகச் சென்று 50 பேரையாவது சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்றால் திமுக ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!