முத்தரசன்: மோதலை உருவாக்கும் முயற்சி தோற்கும்

சென்னை: மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களிடையே மோதலை உருவாக்க திமுகவும் அதிமுகவும் முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். தங்கள் கூட்டணியைப் பிளவு படுத்த யார் முயற்சி செய்தாலும் அது வெற்றிபெறாது என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். "பலம்பொருந்திய மக்கள் நலக் கூட்டணியைப் பலவீனப் படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஊடகங்களைப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிடும் என தொடர் பிரசாரமும் செய்து வருகின்றனர்.

"சிறுதாவூர் பங்களாவுக்கு கொள்கலன்களுடன் கூடிய வாக னங்கள், லாரிகளில் பணம் சென்றுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் அணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித் துள்ள கருத்து மிகச் சரியானது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது," என்றார் முத்தரசன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூட்டணிக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் குறிப் பிட்டுள்ள அவர், பாண்டியனின் கருத்துக்களை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். "சில தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் செய்திகளை திரித்து வெளியிடுவது கண்டனத் துக்குரியது," என்று முத்தரசன் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!