ஸ்ரீநகர் என்ஐடியில் பதற்றம்

­­­ஸ்ரீ­ந­கர்: அண்மை­யில் நடை­பெற்ற உல­க­க்கோப்பை கிரிக்­கெட் போட்­டி­யில் இந்திய அணி வெளி­யே­றி­யதை அடுத்து ஸ்ரீநகர் என்ஐடி வளா­கத்­தில் உள்ளூர், வெளி­மா­நில மாண­வர்­களுக்கு இடையே இம்­மா­தம் முதல் தேதி மோதல் ஏற்­பட்­டது. இதனை­ய­டுத்து வளா­கத்­தில் ஏற்­பட்ட அமை­தி­யற்ற நிலையால் வகுப்­பு­கள் நடை­பெ­ற­வில்லை; அங்கு பதற்­றம் நில­வி­யது. நேற்று முன்­தி­னம் இரவு சில மாண­வர்­கள் கல்­லூ­ரிக்கு வெளியே போராட்­டம் நடத்த முயற்சி செய்­த­தால் போலி ­சா­ருக்­கும் மாண­வர்­களுக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது. அதில் போலிசார் மோச­மா­கத் தடியடி நடத்­தி­ய­தா­கக் கூறப் ­படு­கிறது. கல்லூரி வளாகத்தில் மத்திய பாது­காப்­புப் படை­யி­னர் குவிக்­ கப்­பட்­டுள்­ள­னர்.

என்ஐடி கல்­லூ­ரி­யில் உண்மை நிலைமை கண்ட­றிய நேற்று இரண்டு பேர் கொண்ட குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சு அனுப்­பி­யது. மாண­வர்­களு­ட­னும் கல்லூரி அதி­கா­ரி­களு­ட­னும் அவர்­கள் பேச்­சுவார்த்தை நடத்­தி­னர். தேர்­வு­களை ஒத்­திவைக்க வேண்டும், தகுந்த பாது­காப்பு அளிக்க வேண்டும் என வெளி­மா­நில மாண­வர்­கள் வைத்த கோரிக்கையை கல்லூரி அதி­கா­ரி­கள் ஏற்றுக்­கொண்ட­தா­கக் கூறப்­ பட்­டது. மேலும் உள்­ளூரைச் சேர்ந்த விடுதிக் காப்­பா­ள­ருக்­குப் பதிலாக வெளி­மா­நி­லத்தைச் சேர்ந்த நபர் நிய­மிக்­கப்­பட்­ டுள்­ளார். மாண­வர்­கள் மீது போலிசார் தாக்­கு­தல் நடத்­தி­ய­தற்கு பாஜ­க­தான் காரணம் என டெல்லி முதல் அமைச்­சர் கெஜ்­ரி­வால் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!