உயரமாக வளர ஆசைப்பட்டு கால்கள் இரண்டிலும்

அறுவைசிகிச்சை; மருத்துவமனை மீது நடவடிக்கை ­­­ந­கரி: ஹைத­ரா­பாத்தை அடுத்த போயன்­பள்ளி பகு­தியைச் சேர்ந்த­வர் கோவர்­தன் ரெட்டி. இவரது மகன் நிகில் ரெட்டி. மென்­ பொ­ருள் பொறி­யா­ள­ரான இவர் தனியார் நிறு­வ­னத்­தில் பணி ­பு­ரிந்து வந்தார்.

5.7 அடி உய­ர­முள்ள நிகில்­ரெட்டி இன்னும் உய­ர­மாக வளர விரும்­பினார். அப்போது, ஹைத­ரா­பாத்­தில் உள்ள 'குளோபல்' மருத்­து­வ­மனை­யில் எலும்பு தொடர்­பான மருத்­து­வர்­களைச் சந்­தித்­துத் தனது விருப்­பத்தைத் தெரி­வித்­தார். அவ­ரி­டம், ரூ. 4 லட்சம் கட்­டினால் அறுவை­சி­கிச்சை செய்­வ­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

பெற்­றோ­ருக்­குத் தெரி­யா­மல் வீட்டில் இருந்த நகை­களை எடுத்து விற்று ரூ. 3 லட்­சத்தை நிகில் மருத்­து­வ­மனை­யில் கட்­டினார். அதன்­பின் பெற்­றோ­ரி­டம் எதுவும் தெரி­விக்­கா­மல் நான்காம் தேதி மருத்­து­வ­மனை­யில் சேர்ந் தார். அவ­ருக்கு மருத்­து­வர்­கள், கால்­களின் எலும்­பு­களைத் துண்டாக்கி இடையே தகடு வைத்து அறுவை­சி­கிச்சை செய்­த­னர். இதற்­கிடையே, மகன் மாய­மா­ன­தால் தந்தை கோவர்த்­தன் ரெட்டி போலிசில் புகார் செய்தார்.

நிகிலின் நண்­ப­ரி­டம் விசா­ரித்­த­போது, நிகில் மருத்­து­வ­ மனை­யில் சேர்ந்தது தெரி­ய­ வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்­து­வ­மனைக்­குச் சென்று பார்த்­த­னர். பெற்றோர் கையொப்­பம் இல்­லா­மல் அறுவை­சி­கிச்சை செய்தது குறித்து நிகிலின் தந்தை மருத்­து­வர்­களி­டம் கேட்டார். அதற்கு, சிகிச்சை பெறு­ப­வ­ரின் கையொப்­பம் மட்டுமே போது­மா­னது எனும் பதில் கிடைத்­தது.

உய­ர­மாக வளர ஆசைப்­பட்டு வீட்டில் பணத்தைத் திருடி மருத்­து­வ­மனை­யில் கொடுத்து அறுவை சிகிச்சை செய்­து­ கொண்ட நிகில் ரெட்டி (உள்­ப­டம்). அவரை மருத்­து­வ­மனை­யில் பார்த்து கண்ணீர் வடித்த தந்தை (நிற்போரில் இடமிருந்து முதலாவது). படங்கள்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!