வைகோவின் கணக்கையும் சோதிடரையும் நம்பிய தேமுதிக

சென்னை: வைகோ போட்ட தவ றான தேர்தல் கணக்கையும் சோதிடரையும் நம்பி மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேர்ந்து விட்டது என்று தேமுதிகவி லிருந்து நீக்கப்பட்ட அதன் முன்னாள் கொள்கை பரப்புச் செய லாளர் சந்திரகுமார் புலம்பித் தள்ளியிருக்கிறார். 'நமது நாளிதழ்' என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கட்சியிலிருந்து விஜயகாந்த் தன்னை அவசரமாக நீக்கிவிட்ட தாகவும் அவர் கூறியிருக்கிறார்.

"முன்பெல்லாம் விஜயகாந்த் 'மைக்' பிடித்துப் பேசினால் எங் களது நாடி, நரம்புகள் எல்லாம் துடிக்கும். உணர்ச்சிகரமாகப் பேசு வார். ஆனால், இன்றைக்கு அவ ரால் அதிகம் பேச முடியாத ஒரு நிலை உள்ளது. அதை நினைத்து நான் வருந்துகிறேன். "மக்கள் நலக் கூட்டணியை விட, பாஜக கூட்டணியை பிரேமலதா பெரிதும் விரும்பினார். "ஆனால், இவர்கள் வைத்த பல கோரிக்கைகளை பாரதிய ஜனதா ஏற்றுக்கொள்ளவில்லை. பிரேமலதாதான் பாரதிய ஜனதா வுக்கு கூட்டணிக் கதவை திறந் தார். இறுதியாக அவரே அடைக் கவும் செய்தார். "இந்த நிலையில் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்று வதாக வைகோ கூறியதால் அதை ஏற்று மக்கள் நலக்கூட்டணியை பிரேமலதா தேர்வு செய்தார். "பிரேமலதா, கட்சியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். அவர் சொல்வதை கேட்டுத்தான் விஜயகாந்த் முடிவு களை எடுக்கிறார். மக்கள் நலக் கூட்டணி முடிவையும் பிரேம லதாதான் தனிப்பட்ட முறையில் எடுத்தார்.

"கடந்த, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே கட்சியை பிரேமலதா தன்வயப்படுத்தி வந்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவும் அவர் எடுத்ததுதான். இது, கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். திமுக வுடன் கூட்டணி வைக்கும் முடிவுக்கு விஜயகாந்த் மனதள வில் தயாராகி விட்டார். "அதற்காகவே, கருணாநிதி, ஸ்டாலினை விமர்சிப்பதை அவர் தவிர்த்தார். கூட்டணி குறித்து நாங்கள் கேட்கும்போது கூட் டணிக் கதவுகள் திறந்து வைக்கப் பட்டுள்ளன. சரியான நேரத்தில் முடிவெடுக்கலாம் என்றார்.

பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் தேமுதிக இருக்கிறது என்று தேமுதிகவின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரசேகர் தெரிவித்தார். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!