விஜயகாந்துடன் இணைந்தார் வாசன்

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­த­மி­ழ­கச் சட்­ட­மன்றத் தேர்தலை மக்கள் நலக் கூட்­ட­ணி­யில் இணைந்து சந்­திக்க முடி­வெ­டுத் துள்ளார் ஜி.கே.வாசன். பெரிய கட்­சி­கள் அனைத்­தும் கூட்டணி அமைத்­து­விட்ட நிலையில், காங்­­­­­­­கி­­­­­­­ரஸ் கட்­­­­­­­சி­­­­­­­யி­­­­­­­லி­­­­­­­ருந்து பிரிந்து ஓராண்­டுக்கு முன்பு தமாகாவை தொடங்­கிய ஜி.கே.வாசன், யாருடன் கூட் டணி அமைப்­பது என்று முடிவு செய்­யா­மல் இருந்து வந்தார். முதலில் அதி­­­­­­­மு­­­­­­­க­­­­­­­வு­­­­­­­டன் இணைந்து தேர்தலை சந்­­­­­­­திக்க விரும்­­­­­­­பினார். ஆனால் வாசன் கேட்ட இடங்களை கொடுக்க அதிமுக தயாராக இல்லை. மேலும், இரட்டை இலைச் சின்­­­­­­­னத்­­­­­­­தி­­­­­­­லேயே போட்­­­­­­­டி­­­­­­­யிட வலி­­­­­ யு­­­­­­றுத்­­­­­­­தி­­­­­­­ய­­­­­­­தால் அதி­ருப்தி அடைந் தார் வாசன். அதிமுக கூட்­ட­ணி­யில் இணையும் முடிவை கைவிட்­டார்.

மக்கள் நலக் கூட்டணி தலை­வர்­கள் ஏற்­கெ­னவே அழைப்பு விடுத்த நிலையில், வாசனும் அவர்­களு­டன் சேருவது என முடி­வெ­டுத்­தார். இதைத் தொடர்ந்து, ஆழ்வார் பேட்டை­யில் உள்ள இல்­லத்­தில் ஜி.கே.வாசனை, மக்கள் நலக்­கூட்­டணி தலை­வர்­கள் வைகோ, தொல்.திரு­மா­வ­ள­வன், ஜி.ராம­கி­ருஷ்­ணன், முத்­த­ர­சன் ஆகியோர் சந்­தித்­துப் பேசினர். அரை மணி நேரம் ஆலோ­சனைக்­குப் பிறகு தேமுதிக தலைவர் விஜ­ய­காந்தை கோயம்­பேட்­டில் உள்ள தேமுதிக அலு ­வ­ல­கத்­தில் அவர்­கள் சந்­தித்­ததைத் தொடர்ந்து கூட்­ட­ணியை உறுதி செய்தார் ஜி.கே.வாசன்.

தமிழக சட்­ட­மன்றத் தேர்­த­லில் பிரதான கட்­சி­களை எதிர்த்­து தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி இணைந்து கள­மி­றங்­கு­கிறது. தேமுதிக 124 தொகு­தி­களி­லும் மக்கள் நலக்­கூட்­டணி 110 இடங்களி­லும் போட்­டி­யி­டு­வது என்று ஏற்­கெ­னவே ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. தற்போது இக்­கூட்­ட­ணி­யில் தமிழ் மாநில காங்­கி­ர­சும் இணைந்து உள்­ள­தால், இன்று மாமண்­டூ­ரில் நடக்­கும் மாநாட்­டில் கூட்டணி இறுதி செய்­யப்­பட்டு வேட்­பா­ளர் பட்­டி­யல் வெளி­யி­டப்­படும் என்றும் தமா­கா­வுக்கு 26 இடங்கள்­ கொடுக்­கப்ப­ட­லாம் என்றும் கூறப்படுகிறது.

விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியினருடன் ஜி.கே. வாசன் (வலமிருந்து மூன்றாவது). படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!