கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்ட விரைவு ரயில் சேவை

அம்ருதசரஸ்: பஞ்சாப் மாநிலம், அம்ருதசரஸில் 'ஷான்-ஏ-பஞ்சாப் எக்ஸ்பிரஸ்' என்ற ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடக்கி வைத்தார். பெண்கள் பெட்டி உள்ளிட்ட 21 பெட்டிகளிலும் மொத்தம் 122 சிசிடிவி புகைப்படக் கருவிகள், ரூ.36 லட்சம் செலவில் பொருத்தப்பட்டுள்ளன. பதிவாகும் காட்சிகள் தேவைப்பட்டால் பார்ப்பதற்கு வசதியாக ஒரு மாதம் வரை சேமித்து வைக்கப்படும்.

சுரேஷ் பிரபு பேசுகையில், "பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக, ரயில்களில் சிசிடிவி புகைப்படக் கருவிகள் பொருத்தப்படும் என்று ரயில்வே வரவுசெலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த ரயிலில் அனைத்துக் கதவுகளிலும் சிசிடிவி புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, பெரும்பாலான ரயில் நிலையங்களில் அவசர உதவி மையங்கள், ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என்றார் அவர். திருட்டு போன்ற சட்டவிரோதச் செயல்களைக் குறைக்கவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் அதிக ரயில்களில் முழுமையாக புகைப்படக் கருவிகளைப் பொருத்துவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது. Railway Minister Suresh Prabhu flags off the Shan-e-Punjab Express.

‌ஷன்-இ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் இந்திய ரயில்வே அமைச்சர் சுரே‌ஷ் பிரபு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!