தமாகவும் உடைகிறது

நடிகர் விஜயகாந்தின் தேமுதிக இரண்டாக உடைந்துள்ள நிலையில் வாசனின் தமிழ் மாநில காங்கிரசிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததற்கு தமாகாவில் எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். எஸ்.ஆர். பாலசுப்பிர மணியன், பீட்டர் அல்போன்ஸ், காஞ்சிபுரம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விசுவநாதன் உட்பட பலர் அதிருப்தியில் அதிரடி நடவடிக்கையில் இறங்கி யிருக்கின்றனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பீட்டர் அல் போன்ஸ் தலைமையிலான ஒரு பிரிவினர், விரைவில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகத் திட்டமிட்டுள் ளனர். திரு எஸ்.ஆர். பால சுப்பிரமணியன் அதிமுகவில் சேர முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமாகாவிலிருந்து விலகி யிருக்கும் மற்றொரு முக்கிய பிரமுகரான விசுவநாதன், தாய்க் கட்சியான காங்கிரசில் இணைகிறார்.

தனது முடிவு குறித்துப் பேசிய விசுவநாதன், "காமராஜர் ஆட்சியையும் அவரது கொள் கைகளையும் செயலாக்கும் பொறுப்பை ஜி.கே. வாசனிடம் ஒப்படைத்தோம். அவரோ விஜய காந்துக்கு பட்டாபிஷேகம் செய்வேன் என்கிறார். எங்களுக்கு இதில் உடன் பாடில்லை," என்றார். சில நாட்களுக்கு முன் தேமுதிகவிலிருந்து விலகிய சந்திரகுமார் தலைமையிலான ஒரு பிரிவு, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கி தலைமைக்கு தலைவலி கொடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!