திரளாத கூட்டம்: தமிழருவி வருத்தம்

தேவகோட்டை: காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுக் கூட்டத்துக்குப் பொதுமக்கள் அதிகளவில் திரளாத காரணத்தால் அதன் தலைவர் தமிழருவி மணியன் மிகுந்த வருத்தத்தில் மூழ்கினார். நேற்று முன்தினம் தேவகோட்டையில் அந்த இயக்கத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழருவி மணியன் சிறப்புரையாற்ற இருந்தார். எனினும், அவர் மேடைக்கு வந்தபோது, ஏறக்குறைய 50 பேர் மட்டுமே மேடையின் முன் அமர்ந்திருந்தனர். கூட்டம் திரளாததால் தமிழருவி வருத்தமடைந்தார்.

இதனால் சில நிமிடங்கள் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்த அவர், பின்னர் உரையாற்றாமலேயே கிளம்பிச் சென்றார். அவரது பேச்சைக் கேட்க கூடியிருந்த அந்த ஒருசிலரும் ஏமாற்றமடைந்தனர். அவர் முக்கிய பணி காரணமாக அவசரமாக புறப்பட்டுச் சென்றதாகக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!