பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா தாம் சொன்னது எதையும் செய்வதற்காகச் சொல்வ தில்லை என்பதைத் தமிழக மக்கள் தெரிந்து வைத்திருப்பதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். "தேர்தல் பிரசாரத்தில் ஈடு படும் முதல்வர் ஜெயலலிதா, பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதை விட்டுவிட்டு, உண்மை ஏதாவது கைவசம் இருந் தால், அதைப் பற்றிப் பேசட்டும் இல்லாவிட்டால் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, முதல்வர் ஜெயலலிதா என்றுதான் பாடத் தோன்றும்.

"ஜெயலலிதா, தேர்தல் அறிக் கையில் சொன்ன வாக்குறுதிகளை யும் நிறைவேற்றவில்லை சட்டப் பேரவையில் 110ஆம் விதியின் கீழ் சொன்ன திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அவற்றை நிறை வேற்றாததைப் பற்றிக் கவலைப் படவும் இல்லை," என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டு காலத்தில் சட்டப்பேரவையில் 110ஆம் விதி யின் கீழ் 187 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித் திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த அறிவிப்புகளில் எவற்றை எல்லாம் நிறைவேற்றியுள்ளார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!