நடக்கப்போவது சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல; யுத்தம்: வர்ணிக்கிறார் விஜயகாந்த்

இருப்பது சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல என்றும் அது ஒரு யுத்தம் என் றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வர்ணித்துள்ளார். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரசாரக் கூட்டத் தில் பேசிய அவர், தேர்தல் யுத்தத்தில் தங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றார். "திமுக தலைவர் கருணாநிதி தேர் தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவதாகக் கூறியுள்ளார், மகிழ்ச்சி. ஆனால் அவர் ஐந்து முறை முதல்வராக இருந்தபோது ஏன் மதுவிலக்கை கொண்டுவரவில்லை?

"ஜெயலலிதாவும் மதுவிலக்கு படிப் படியாக அமலுக்கு வரும் என்கிறார். ஏன் படிப்படியாக குறைக்கவேண்டும்? இதைக் கேட்டு பொதுமக்கள், 'வாட்ஸ் அப்'பில், கால்படி, அரைப்படி, முக்கால் படி, ஒரு படி என இப்படிப் படிப்படியாகக் குறைப்பார்களா என விமர்சனம் செய்கிறார்கள். எந்த அளவுக்கு கிண்டல் செய்கிறார்களோ, அந்தளவுக்கு நாடு குட்டிச்சுவராகப் போய்விட்டது என்று அர்த்தம்," என்றார் விஜயகாந்த்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!