சென்னை: தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையுமே முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்ற வில்லை என திமுக மகளிரணி செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். காணொளி ஆட்சியாக இருந்த அதிமுக ஆட்சி இப்போது ஸ்டிக்கர் ஆட்சியாக மாறிவிட்டது என்றும், அது மிக விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி, கடந்த ஐந்து ஆண்டு காலமாக மதுவிலக்கை அமல்படுத்தாத ஜெயலலிதா, இப் போது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று கூறு வது மக்களை ஏமாற்றும் செயல் எனச் சாடினார். "அதிமுக ஆட்சியில் வழங்கப் பட்ட இலவச மின் பொருட்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. ஆனால் திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் இப்போதும் கூட நல்ல நிலையில்தான் இயங்குகின்றன. "ஜெயலலிதா சொன்ன எந்த வாக்குறுதியையும் அவர் நிறை வேற்றியதில்லை. சட்டப்பேரவை யில் 110 விதியை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான அறிவிப்பு களை வெளியிட்ட ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். இதில் ஒன்றி ரண்டைத் தவிர மற்ற எதையும் அவர் நிறைவேற்றவில்லை," என் றார் கனிமொழி.