169 தொகுதிகளில் திமுக- அதிமுக மோதல்

முக்கிய கட்சிகளின் வேட்பா ளர்கள் பட்டியல் வெளியாகி விட்டதால் தமிழகத் தேர்தல் களம் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர் தலைப் போலவே வேட்பாளர் அறிவிப்பில் இம்முறையும் அதிமுக முந்திக்கொண்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல் லாத அளவாக அக்கட்சி 227 தொகுதிகளில் போட்டி யிடுகிறது. முக்கிய எதிர்க்கட்சியான திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட் டது. தேமுதிக=மக்கள் நலக் கூட்டணி, பாமக போன்ற வேறு கட்சிகளும் கூட்டணி களும் தேர்தலில் போட்டியிட் டாலும் எப்போதும் போல அதிமுகவிற்கும் திமுகவிற் கும் இடையில்தான் கடும் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் 169 இடங்களில் நேருக்கு நேர் மல்லுக்கட்டு வதால் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கும் என்று சொல்லப்படுகிறது.

விஜயகாந்த் (தேமுதிக), அன்புமணி ராமதாஸ் (பாமக), சீமான் (நாம் தமிழர்) என மேலும் மூவர் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கினாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைவர் கருணாநிதிக்கும் (இடது) அதிமுக தலைவி ஜெயலலிதாவிற்கும் இடையேதான் முக்கிய போட்டி நிலவுகிறது. படங்கள்: தகவல் சாதனம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!