1 கிலோ தங்கம் கடத்தியவர் கைது

ஆலந்தூர்: துபாய், மஸ்கட் டில் இருந்து கடத்தி வரப் பட்ட ரூ.30 லட்சம் மதிப் புள்ள 1 கிலோ தங்கத் தைக் கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள் இதுதொடர்பாக ஆந்திரா வைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலை யத்துக்கு நேற்று முன் தினம் அதிகாலை துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் ஆந்திராவைச் சேர்ந்த சஞ்சீவி, 38, என்பவரிடம் இருந்த பெட்டியைத் திறந்து பார்த்ததில் 'எமர்ஜென்சி' விளக்கில் 'பேட்டரி' வைக்கும் பகுதியில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந் ததைக் கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். இதேபோல் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத் தில் ஆந்திராவைச் சேர்ந்த மல்லிகா, 43, என்பவரின் கைப்பையில் இருந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!