பாமக தேர்தல் அறிக்கை: சாராயம் காய்ச்சினால் ஆயுள் தண்டனை

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட முதல் பிரதியை பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், நாட்டு நலன் கருதி தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதுபோல எந்தக் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை என்றும் சொன்னார்.

முழு மது விலக்கு; வேளாண் சிறப்பு மண்டலங்கள் துவக்கப்படும்; விளை நிலங்கள் - நீர்வளம் காத்திடச் சிறப்பு சட்டங்கள்; மாணவர்கள் பேருந்து; பேருந்து நிலை யங்களில் 'வைஃபை' வசதி; மாணவர்களுக்குப் பேனா முதல் 'ஐபேட்' வரை இலவசம்; அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு; கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் தண்டனை; திருச்சி 2வது தலைநகரமாக ஆக்கப்படும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை; மாணவர்களின் கடன்களை அரசு ஏற்பு; புதிய மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!