கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதா பொய்க் குற்றம் சுமத்துகிறார்

மதுரை: இலங்கைக்கு கச்சத் தீவு வழங்கப்பட்டதில் திமுகவுக்கு எவ்விதப் பங்கு இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தபோது திமுக அதைத் தடுக்க முயற்சி மேற் கொள்ளவில்லை என முதல்வர் ஜெயலலிதா தமது தேர்தல் பிரசாரத்தின்போது குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு மதுரையில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது பதிலளித்த ஸ்டாலின், கச்சத்தீவு தொடர்பாக திமுக மீது ஜெயலலிதா அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளதாகக் கூறினார்.

"திமுக ஆட்சியில் இருந்த போது கச்சத்தீவு கைமாறவில்லை. நெருக்கடி காலத்தில் தான் கொடுக்கப்பட்டது," என் றார் ஸ்டாலின். கச்சத்தீவை மீட்க வேண் டும் என திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த திமுக ஆட்சியின்போது கச்சத் தீவை மீட்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தாகச் சுட்டிக்காட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!