இரு வேட்பாளர்களை மாற்றிய திமுக தலைமை: நீடிக்கும் போராட்டங்கள்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்த லில் போட்டியிடுவதாக அறிவிக் கப்பட்டிருந்த 2 வேட்பாளர்களை மாற்றியுள்ளது திமுக தலைமை. அரக்கோணம், ஒரத்தநாடு தொகுதிகளுக்குப் புதிய வேட்பா ளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள், தொண்டர்களின் தொடர் போராட்டங்கள் காரணமா கவே வேட்பாளர்கள் மாற்றப்பட்ட தாக திமுக வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

சீர்காழி, ஜோலார்பேட்டை, ஆலங்குடித் தொகுதி உட்பட பல் வேறு தொகுதிகளுக்கு அறிவிக் கப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பில் திமுகவினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பிட்ட சில வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீக்குளிப்புகளும் உருவப் பொம்மை எரிப்புகளும் அரங்கேறி வருகின்றன. அணைக்கட்டு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் போராட்டங் களில் திமுகவினர் ஈடுபட்டுள் ளனர்.

இந்நிலையில் அரக்கோணம் தனித்தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பவானிக்கு பதிலாக என். ராஜ்குமாரும், ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கத்தின் தம்பி ராஜ்குமா ருக்குப் பதிலாக ராமச்சந்திரனும் புதிய வேட்பாளர்களாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் மாற்றத்தால் கொதிப்படைந்த திமுகவினர். படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!