விஜயகாந்த்: நடிகர் ரஜினியைப் போல் நான் பணிந்து பின் வாங்கியதில்லை

திருத்தணி: நடிகர் ரஜினியைப் போல் அரசியலுக்கு வர தாம் தயங்கியதில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நடைபெற உள்ள தேர்தல் முரட்டு பணத்திற்கும் முரட்டு மனங்களுக்கும் இடையே நடக்கும் போட்டி என்றார். "ரஜினியை அரசியலுக்கு வரு மாறு அழைத்தனர். அவர் வர வில்லை. அது அவரது குணம். அதனை தவறு எனக் கூற முடி யாது. அதேசமயம் ரஜினியைப் போல் அரசியலுக்கு வர நான் பயப்படவில்லை.

"ரஜினி நடித்த ஒரு திரைப் படத்தில் இருந்து சில காட்சிகளை நீக்கச் சொல்லி டாக்டர் ராமதாஸ் மிரட்டல் விடுத்தார். அதற்குப் பணிந்து ரஜினி பின்வாங்கினார். அதேபோல் ராமதாஸ் எனக்கு மிரட்டல் விடுத்தபோது நான் பின்வாங்கவில்லை," என்றார் விஜயகாந்த். அன்பாகக் கேட்டாலும் அடித்துக் கேட்டாலும் தம்மால் உண்மையை மட்டுமே பேச முடியும் என்று குறிப்பிட்ட அவர், முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சியில் தமிழகத்தை குட்டிச்சுவராக்கிவிட்ட தாகச் சாடினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!