அதிருப்தியாளர்களால் தடுமாறும் கட்சிகள்

இதுவரை இல்லாத அள­வுக்கு குழப்­பங்களும் திருப்­பங்களும் நிறைந்த­தாக உள்ளது இந்த தமி­ழ­கச் சட்­ட­மன்றத்­ தேர்தல். இம்முறை பல­முனைப் போட்டி நில­வு­கிறது. அதிமுக, திமுக, தேமுதிக= மக்கள் நலக் கூட் டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆகியவை 234 சட்­ட­மன்ற தொகு­தி­களி­லும் களம் இறங்­கு­கின்றன. மேலும் விடியல் கூட்டணி, எஸ்­டி­பிஐ, அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியுடன் பல சமுதாய அமைப்­பு­களும் களம் இறங்­கு­கின்றன. சுயேச்சை வேட்பாளர்களும் அதிகம் இருப்பார்கள். எனவே, அனைத்­துத் தொகு­தி­களி­லும் வேட்­பா­ளர் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

இந்த­வேளை­யில், கட்­சி­களுக்­குள்­ளேயே அதி­ருப்தி அதி­க­ரித்­ தி­ருப்­பது கட்­சி­களுக்­குப் பெரும் சிக்கலை ஏற்­படுத்­தி­யுள்­ளது. ­­­­­­­தி­முக தலைமை அறி­வித்த வேட்பாளர்­களுக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து நேற்றும் பல்வேறு இடங்களில் அதி­ருப்­தி­யா­ளர்­கள் போராட்­டம் நடத்­தி­னர். திமுக வேட்­பா­ளர் பட்­டி­யல் 13ஆம் தேதி வெளி­யி­டப்­பட்­டது. மறுநாளே பல தொகு­தி­களில் வேட்­பா­ளரை மாற்­றக்­கோரி போராட்­டம் நடந்தது. அணைக்­கட்­டுத் தொகு­தி­யில் வேட்­பா­ளர் மீது தாக்­கு­தல் நடந்தது. பல தொகு­தி­களில் தொடர்ந்து போராட்­டம் நடந்து வரு­கிறது.

அதி­மு­க­வில் 36 தொகுதி வேட்­பா­ளர்­களுக்கு பொது மக்கள், கட்­சி­யி­னர் மத்­தி­யில் அதி­ருப்தி நில­வு­வ­தாக கட்சித் தலைமைக்கு உள­வுத்­துறை அறிக்கை அளித்­துள்­ள­தாக கூறப்­படு­கிறது. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி, அதிமுக வேட்­பா­ளர்­கள் பட்­டி­யல் வெளி யான பின், ஆறு முறை திருத்­தம் செய்­யப்­பட்டு, 13 பேர் மாற்­றப்­பட்­ட­னர். மேலும் பலர் மாற்­றப்­ப­ட­லாம் என்று கூறப்­படு­கிறது.

இந்­நிலை­யில் மக்களை ஓரி­டத்­திற்கு அழைத்து வந்து அரசு சாதனை­களை பட்­டி­ய­லி­டும் ஜெய­ல­லி­தா­வின் பிர­சா­ரம் மக்­களைக் கவ­ரா­த­தும் கட்­சி­யி­ன­ரி­டம் அதி­ருப்­தியை ஏற்­படுத்தி உள்ளது. மேலும், அவரை காண வரும் மக்கள் உச்சி வெயிலில் பரி­தவிக்க அவர் 'ஏசி' இயந்­தி­ரங்கள் சூழ அமர்ந்து எழுதி வைத்­தி­ருப்­பதை படிப்­பது மக்­களி­டம் எடு­ ப­ட­வில்லை. அவரது பிரசார பொதுக்­கூட்­டம் மக்­களி­டம் அதி­ருப்­தியை ஏற்படுத்தியுள்ளதால் அதிமுகவினர் என்ன செய்வது எனத் தெரி­யா­மல் தவிக்கின்றனர். தேமுதிக உட்பட மற்றக் கட்சி களிலும் அதிருப்தி அதிகரித்து வருகிறது.

தமி­ழ­கம், புதுச்­சே­ரி­யில் 22ஆம் தேதி முதல் அனைத்து சட்­ட­மன்ற தொகு­தி­களி­லும் வேட்பு மனுத் தாக்கல் துவங்­கு­கிறது. 29ஆம் தேதி கடைசி நாள். அதிமுக, திமுக, வேட்­பா­ளர்­கள், சுப­மு­கூர்த்த நாளான 25ஆம் தேதி மனுத் தாக்கல் செய்ய உள்­ள­தாக தகவல் வெளியாகி இருக்கிறது. திரு­வா­ரூ­ரில் போட்­டி­யி­டும் திமுக தலைவர் கரு­ணா­நிதியும் மற்ற வேட்­பா­ளர்­களும் ஏப்ரல் 25ல் மனுத் தாக்கல் செய்ய உள்ளனர். அதேபோல், அதிமுக வேட்­பா­ளர்­களும் அன்றைய தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்­ள­தாக கூறப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!