மேற்கு வங்கத் தேர்தல் வன்முறையில் 9 பேர் காயம்

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இரண்டாவது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மால்டா உள்ளிட்ட இரண்டு இடங்களில் நடந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில் 10 பேர் காயமுற்றனர். பிர்பும் வாக்குச் சாவடி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் களுக்கும் பா.ஜ.க தொண்டர்களுக் கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மால்டாவில் நடந்த தொண்டர்கள் மோதலில் ஆறு பேர் காயமடைந்தனர்.

மேலும் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தனியாக வும் இடதுசாரியும் காங்கிரசும் இணைந்து போட்டியிடுகின்றன. இம்மாநில தேர்தலில் முதல் கட்டத்தில் 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!