ரஜினி ரசிகர்கள் திமுகவிற்கு ஆதரவு

தமிழகத்தில் தேர்தல் காலம் தொடங்கி விட்டாலே நடிகர் ரஜினிகாந்த் இம்முறை யாருக்கு ஆதரவளிப்பார் என்ற எதிர் பார்ப்பும் பரபரப்பும் தொற்றிக்கொள்வது வழக்கம். 1996ல் அதிமுகவிற்கு எதிராக ரஜினி பேசியதையடுத்து தமிழக சட்ட மன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக-தமாகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பின்னர் நடந்த தேர்தல்களில் அவர் தமது ஆதரவு யாருக்கு என்பதை வெளிப் படையாக அறிவிக்கவில்லை. அத்துடன், அவரது ரசிகர்களும் பல கட்சிகளும் பலமுறை அழைப்பு விடுத்தும் அரசியலில் கால்பதிக்க அவர் தயாராக இல்லை. இந்நிலையில்,

இப்போதைய சட்ட மன்றத் தேர்தலிலும் அவரைத் தம்பக்கம் இழுக்க சில கட்சிகள் முயன்றன. குறிப்பாக ரஜினியை முதல்வர் வேட் பாளராக அறிவிக்கவும் பாஜக தயாராக இருந்தது. ஆனால் எதற்கும் மசியாத ரஜினி, "மக்கள் அனைவரும் தேர்தலில் வாக்க ளிக்க வேண்டும்," என்று மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிவிட்டார். முன்னாள் அமைச்சரும் திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே என் நேருவை (இடமிருந்து 2வது) சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் திருச்சி ரஜினி ரசிகர் மன்றத்தினர். படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!