பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து: கலைக்குழுவினர் 30 பேர் மரணம்

பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால் நடன, நாட்டியக் குழுவைச் சேர்ந்த 30 கலைஞர்கள் உயிரிழந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்தது. இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். 'பாரத கான நாட்டியா' என்ற அந்தக் கலைக்குழுவைச் சேர்ந்த 40 பேர் நேற்று முன்தினம் மாலையில் பேருந்து மூலம் தியோகரில் இருந்து பர்கார் மாவட்டம், ரேம்தாவிற்குச் சென்றனர். இரவு 7 மணியளவில் பேருந்து சாலையில் இருந்து வழுக்கிச் சென்று 300 அடி ஆள கைலாஷ் பள்ளத்தாக்கில் விழுந்தது. விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதில் சம்பவ இடத்திலேயே 27 பேர் பலியாகினர். மேலும் மூவர் மருத்துவ மனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இரவு நேரம் என்பதாலும் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளச் சிரமமாக இருந்தது. ஆகையால் மீட்புப் பணி களைத் துரிதப்படுத்துவதற்காக 'ஜென ரேட்டர்கள்' பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், விபத்தில் உயிரிழந் தோரின் குடும்பத்தாருக்கு இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறி வித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!