தாய் - மகளைக் கொன்று நகை, பணம் கொள்ளை

சென்னை குன்றத்தூரில் ஆசிரி யையையும் அவரது தாயையும் கொடூரமான முறையில் கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை யாகப் பணியாற்றியவர் தேன் மொழி, 30. இவரது கணவர் ராம சாமி, 40, ஏமன் நாட்டில் வேலை செய்கிறார். குன்றத்தூரை அடுத்துள்ள இரண்டாம் கட்டளை பெஸ்லி கார்டனில் தம் தாய் வசந்தா, 64, மகள் சுரபிஸ்ரீ, 7, ஒன்பது மாதக் குழந்தை குணஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார் தேன்மொழி.

இந்நிலையில், நேற்றுக் காலை 6.30 மணியளவில் குணஸ்ரீயைக் கையில் ஏந்திக்கொண்டு கழுத் திலிருந்து ரத்தம் சொட்டியபடியே பக்கத்து வீட்டிற்கு ஓடி வந்தாள் சுரபிஸ்ரீ. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அண்டை வீட்டார், என்ன நடந்தது என்று அவளிடம் கேட்டனர். அப்போது, தன் தாயையும் பாட்டியையும் யாரோ கொலை செய்துவிட்ட தாக அவள் கூறினாள். உடனே சுரபியை அருகிலுள்ள தனி யார் மருத்துவ மனைக்கு அனுப்பி விட்டு அவளது வீட் டிற்குச் சென்று பார்த் தபோது கழுத்து அறு பட்டும் நெஞ்சில் கத் தியால் குத்தப்பட்டும் வசந்தா ரத்த வெள் ளத்தில் கிடந்தார். மற்றோர் அறையில் முதுகில் கத்தியால் குத்தப்பட்டும் கழுத்து அறுக்கப்பட்டும் தேன்மொழி பிணமாகக் கிடந்தார். உடனடியாக போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!