சுட்டெரிக்கும் வெயில்: ஒரே நாளில் 36 பேர் பலி

ஹைதராபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் வெயிலின் உக்கிரத்துக்கு ஒரே நாளில் 36 பேர் பலியாகியிருக்கின்றனர். அண்டை மாநிலமான ஆந்திரா விலும் ஐவர் மாண்டனர். தெலுங்கானாவிலும் ஆந்திரா விலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது.

தெலுங்கானாவின் பெரும் பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களில் வெப்பம் 40 டிகிரி (104 டிகிரி ஃபாரன்ஹிட்) செல்சியசுக்கு எகிறியது. தெலுங்கானாவில் கடுமையான வெயில் மக்களை வாட்டிவரும் வேளையில் பள்ளி, கல்லூரி களுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

சில தொழிற்சாலைகளில் மதி யம் வேலை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ஆந்திரா, ஆதிலாபாத், நிஜாமா பாத் போன்ற இடங்களில் கடுமை யான அனல் காற்று தொடர்ந்து வீசுவதால் மக்கள் வெளியே தலை காட்டுவதற்கே அஞ்சுகின்றனர். இந்தியாவில் இவ்வாண்டு கோடை வெயிலுக்கு இதுவரை 100 பேர் இறந்துவிட்டனர். இந்த நிலையில் ஒரே நாளில் 36 பேர் வெயிலுக்கு பலியாகி யிருப்பது மாநில அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடுமையான வெயில் நிலவுவதால் தண்ணீரிடம் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். கோப்புப் படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!