தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ஸ்டாலின் மீண்டும் புகார்

விழுப்­பு­ரம்: சட்­டப்­பே­ரவைத் தேர்­தல் தொடர்­பில் ஆளும் கட்­சி­யி­ன­ரது விதி மீறல்­கள் தொடர்ந்து நீடித்து வரு­வ­தாக திமுக பொரு­ளா­ளர் மு.க.ஸ்டா­லின் குற்­றம்­சாட்டி உள்­ளார். விழுப்­பு­ரத்­தில் தேர்­தல் பிர­சா­ரம் மேற்­கொண்ட அவர், விதி­ மீ­றல்­களைக் கட்­டுப்­படுத்த தேர்­தல் ஆணை­யம் தவ­றி­விட்­ட­தா­கத் தெரி­வித்­தார். "ஆட்­சி­யர், மாவட்ட வரு­வாய் அலு­வ­லர் உள்­ளிட்ட உயர் அதி­கா­ரி­கள் மூன்று ஆண்­டு­களுக்கு மேல் ஓரி­டத்­தில் பணி­பு­ரிந்தால் அவர்­கள் பணி­யிட மாற்றம் செய்­யப்­பட வேண்­டும். ஆனால் அவ்­வாறு மாற்­றப்­பட்­டி­ருக்­கிறார்­களா?

"அவ்­வ­ளவு ஏன்? 'அம்மா உத்தரவின் பேரில் மழை பெய்­தது' என்ற கூறிய அதி­காரி கூட இன்­னும் அதே இடத்­தி­லேயே பணி­பு­ரி­கிறார். இதை­யெல்லாம் பார்க்­கும்போது தேர்­தல் ஆணை யம் ஆளும் கட்­சிக்கு ஆத­ர­வாகத் தான் செயல்­படு­கிறது என்­று­தானே அர்த்­தம்," என்று ஸ்டா­லின் தெரி­வித்­தார். இதற்­கெல்­லாம் தேர்­தல் ஆணை­யம் பதில் கூற வேண்­டிய காலம் வெகு விரை­வில் வரும் என்று குறிப்­பிட்ட அவர், ஜெய­ல­லிதா பங்­கேற்­கும் கூட்டங்களில் மனித உரிமை மீறல்­களும் நிகழ் வதா­கச் சாடினார்.

விழுப்புரத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையைக் கேட்பதற்குத் திரண்ட மக்கள். படம்: அறிவாலயம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!