ஜெயா பிரசாரத்தில் தொடரும் சோகம்: சேலத்தில் இருவர் மரணம்

வாட்டி எடுக்கும் வெயில் இந்தியாவில் ஏற்கெனவே நூற்றுக்கு மேற்பட்டோரைப் பலிகொண்டுள்ளது. இப்படி வெளியில் தலைகாட்ட முடியாதபடி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைவி ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டங்களில் இரண்டா வது முறையாக உயிரிழப்பு நேர்ந்தி ருப்பதால் மற்ற கட்சிகள் கொதித் தெழுந்துள்ளன. பக்கத்திற்கு ஐந்து என, இரு புறமும் குளிரூட்டிகள் ஓடியபடி இருக்க மேடையில் அமர்ந்து பேசும் ஜெயலலிதா பொதுமக்களின் நலன் குறித்து சிறிதும் அக்கறை கொள்வதில்லை என்பது எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு.

கடந்த 11ஆம் தேதி விருத்தாசலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் வெயில் தாங் காமல் இருவர் சுருண்டு விழுந்து பலியாகினர். இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் மகுடஞ்சாவடி யில் நடந்த அவரது பிரசாரக் கூட்டத்திலும் பச்சியண்ணன், 55, பெரியசாமி, 62, என்ற இருவர் உயிரிழந்தனர். சென்ற முறை போலவே இம் முறையும் உடல்நலக் குறைவால் அவர்கள் உயிரிழந்ததாகக் கூறி, தேர்தல் முடிந்தபின் அவர்களது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக் கப்படும் என்று ஜெயலலிதா தெரி வித்துள்ளார். இந்த நிலையில், கொளுத்தும் வெயிலில் வெட்டவெளியில் பிர சாரக் கூட்டங்களை நடத்தும் அவரது போக்கை தமிழக எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!