ஓபிஎஸ் தம்பியின் வழக்கு ஒத்திவைப்பு

திண்டுக்கல்: அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா மீதான வழக்கு இம்மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசநாதர் கோயில் பூஜாரி நாகமுத்துவுக்கும் 28, அமைச்சர் பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜாவுக்கும் கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ராஜாவின் ஆதரவாளர்கள் தாக்கியதாக போலிசில் நாகமுத்து புகார் அளித்தார்.

காவல்துறையினர் மனுவைப் பெற மறுத்ததால் "என் சாவுக்கு ராஜாவும் அவரது ஆதரவாளர்களும்தான் காரணம்," எனக் கடிதம் எழுதிவிட்டு நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராஜா உட்பட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் ஓ. ராஜா முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் கண்ணப்பன் மனுத்தாக்கல் செய்தார். மற்ற ஆறு பேர் முன்னிலையாகினர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இம்மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!