‘சோறுக்கும் பீருக்கும் அழைப்பவரை விரட்டுங்கள்’ - பிரேமலதா

திருச்சி: தேமுதிகவின் மாநில மகளிர் அணிச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "காசு கொடுக்க வரும் எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் அடித்து விரட்டுங்கள்," என்று கூறியிருக்கிறார். "சோறுக்கும் பீருக்கும் நூறுக் கும் அழைப்பவர்களை விரட்டி அடித்து எங்களை வெற்றி பெறச் செய்யுங்கள்," என்றும் அவர் சொன்னார். திருச்சி மணப்பாறை சட்ட மன்றத் தொகுதி தேமுதிக வேட் பாளரை ஆதரித்து துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட் டத்தில் அவர் பேசினார். "தமிழகத்தில் தேர்தல் நேரத் தில் மட்டும் மக்களைச் சந்திக் கின்ற கட்சியாக அதிமுக உள்ளது. ஆனால் எங்கள் கூட் டணி அப்படி அல்ல. எந்த நேர மும் மக்களைச் சந்தித்து மக்க ளோடு மக்களாக இருக்கிறவர்கள். "கடந்த சட்டமன்றத் தேர்தலில் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அதில் சில துரோகிகள் மட்டும் வெளியில் சென்று விட்டனர். மற்ற அனைத்து விசுவாசிகளும் கேப்டன் விஜய காந்துடன்தான் இருக்கின்றனர். "மக்களுக்காக எப்போதும் உழைத்துக்கொண்டிருப்பவர்தான் விஜயகாந்த். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா உள்ள எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களின் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளதா? யாரேனும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள் ளது என்று கூறமுடியுமா? இது தான் எங்கள் கூட்டணி. மக்களுக் காக உருவாக்கப்பட்ட மெகா கூட்டணி," என்று பிரேமலதா குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!