வேட்புமனுத் தாக்கல்: நல்ல நாள், நேரம் பார்க்கும் தமிழகக் கட்சித் தலைவர்கள்

அடுத்த மாதம் 16ஆம் தேதி தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுத் தொடங்கியது. இதனால் கட்சிகளின் வேட்பாளர்கள் நிம்மதியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனெ னில், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்பும் பலமுறை அதில் மாற்றம் செய்யப்பட்டதால் வேட்புமனுத் தாக்கல் செய்யும்வரை தேர்தலில் தாங்கள் போட்டியிடுவது நிச்ச யமில்லை என்று அவர்களில் பலர் தவியாய்த் தவித்து வந்த தாகக் கூறப்பட்டது.

அத்தகையோரில் ஒருவர் திமுக முன்னாள் அமைச்சர் மைதீன்கான். பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவரை மாற்றக்கோரி நெல்லை மாவட்ட திமுகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், எதிர்ப்பாளர் களின் குரலுக்குக் கட்சித் தலைமை செவிசாய்த்துவிட் டால் என்னாவது என்று கருதி, நேற்று முதல் ஆளாகப் போய் மனுத்தாக்கல் செய்துவிட்டார் மைதீன்கான். திமுக சார்பில் ஈரோடு மேற்குத் தொகுதியில் எஸ் முத்துசாமி, சங்கரன்கோவில் தொகுதியில் அன்புமணி கணேசன், குமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ‌ஷீபா பிரசாத் ஆகி யோர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

எந்தச் செயலையும் நல்ல நாள், நேரம் பார்த்துத் தொடங்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இம்முறையும் அதைத் தொடர்கிறார். நாளை மறுநாள் 25ஆம் தேதி திங்கட்கிழமை முகூர்த்த நாள் என்பதால் அன்று நண் பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் சென்னை ராதாகிருஷ்ண நகர் அதிமுக வேட்பாளராக அவர் மனுத் தாக்கல் செய்யவுள்ளார். அதே நேரத்திலேயே மற்ற 226 அதிமுக வேட்பாளர்களும் இரட்டை இலைச் சின்னத்தில் நிற்கும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோரும் நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் செய்வர் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!