குற்றச் செயல்களைக் குறைக்க 8 கண்காணிப்புக் கோபுரங்கள்

சென்னை: குற்றச்செயல்களையும் அசம்பாவித சம்பவங்களையும் குறைக்கும் வகையில் மெரீனா கடற்கரையில் 5 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலிசாரின் எச்சரிக்கையையும் மீறி மெரீனா கடற்கரையில் பலர் குளிக்கிறார்கள். அச்சமயம் சிலர் கடலில் மூழ்கி உயிரிழப்பது வாடிக்கையாகியுள்ளது. இதையடுத்து கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றவும் வழிப்பறி, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து மடக்கிப் பிடிக்கவும் கண்காணிப்புக் கோபுரங்கள் உதவும் என போலிசார் கூறியுள்ளனர். நேற்று முன்தினம் வரை 5 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 இடங்களில் கோபுரங்களை அமைக்க உள்ளனர். இந்தக் கண்காணிப்பு கோபுரத்தின் மேல் நின்றுகொண்டு காவலர்கள் 'பைனாகுலர்' மூலம் பார்த்து தினமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!