ஓடும் ரயில் மீது தேங்காய் வீச்சு: ரயில் ஓட்டுநர் படுகாயம்

காட்பாடி: ரயில் மீது திடீரென மர்ம நபர்கள் தேங்காய்களை வீசியதில், ஓட்டுநர் படுகாயமடைந்தார். நேற்று முன்தினம் காட்பாடி அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது. அதிகாலையில் சென்னை நோக்கி அந்த ரயில் வந்து கொண்டிருந்தது. திருவலம் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் ரயிலை நோக்கி தேங்காய்களை வீசினர். ஒரு தேங்காய் ரயில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தலையைத் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து திருவலம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தால் 2 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. ரயிலை கவிழ்க்க சதி செய்து தேங்காய் வீசப்பட்டதா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!