அரிய வகை சுறா மீன்கள் கடத்தல்: மூன்று பேர் கைது

கீழக்கரை: தடை செய்யப்பட்ட சுறா மீன்களைக் கடத்திய 3 பேரை நாகை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் சுறா மீன்களைப் பறிமுதல் செய்து மண்டபத்தில் உள்ள மத்திய கடலோர மீன் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் பூம்புகாரில் இருந்து தடை செய்யப்பட்ட அரிய வகை சுறா மீன்களை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் வழியாக தூத்துக் குடிக் குச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் சக்கரம் (டயர்) திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் அந்த வாகனத்தில் இருந்த பத்து சுறா மீன்களும் கீழே சிதறி விழுந்தன. ராட்சத சுறா மீன்களைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினருக்குத் தகவல் தெரி விக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகா ரிகள் சுறா மீன்களைப் பறிமுதல் செய் தனர். மேலும் வாகனத்தில் வந்த கவி (17 வயது), முத்துக்குமார் (27 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். "ஆழ்கடலை வசிப்பிடமாகக் கொண்டுள்ள அரியவகை சுறா மீன் களைப் பிடிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இருந்தும் சிலர் சட்ட விரோதமாக சுறா மீன்களைப் பிடித்து வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். இந்தப் பத்து சுறா மீன்களும் அரிய வகையைச் சேர்ந்தவை," என்று வனக்காப்பாளர் இன்னாசி முத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!