மேற்கு வங்க 4ஆம் கட்டத் தேர்தல்; 1.08 கோடி பேர் வாக்களிப்பு

கோல்கத்தா: மேற்கு வங்க சட்ட சபை தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப் பாக நடந்தது. மொத்தம் 49 தொகுதிகளில் சுமார் 1.08 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருந்த நிலையில், இத்தேர்தல் களத்தில் 40 பெண்கள் உள்பட 345 பேர் போட்டியிட குதித்திருந்தனர். சாரதா நிதி நிறுவன முறைகேட் டில் கைதாகி அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மதன்மித்ரா கமார் ஹாட்டி தொகுதியில் போட்டி யிட்டார்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கு 6 கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. நேற்று 4-வது கட்டமாக நடந்த தேர்தல் தொடர்பில் 12,500 வாக் குச் சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. 3-வது கட்டத் தேர்தலின்போது முர்சிதாபாத் மாவட்டத்தில் வன் முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் ஒருவர் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக இப்போது அனைத்து வாக்குச் சாவடிகளி லும் பலத்த பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணை யம் செய்திருந்தது. மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 4, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 2ஆம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்றது.

3ஆம் கட்ட வாக்குப்பதிவு இம்மாதம் 21ஆம் தேதி நடை பெற்றது. இந்நிலையில், 4ஆம் கட்ட வாக்குப் பதிவு நேற்றும் 5ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 30ஆம் தேதியும், 6ஆம் கட்ட வாக்குப்பதிவு மே மாதம் 5ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மே மாதம் 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!