ரகசிய ஒப்பந்தம்: திமுக, அதிமுக மீது முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக, அதிமுக இடையே எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் களத்தில் தேமுதிக அணிக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி நிலவுவ தாகக் கூறினார். "திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அவர்களது பிரசார கூட்டங்களில் அதிமுகவை மட்டுமே விமர்சித்து பேசுகின்றனர். இதேபோல், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவும் தனது பிரசாரக் கூட்டங்களில் திமுகவை மட்டுமே குறி வைத்து பேசுகிறார். இதனால், நாம் மகிழ்ச்சியடையக் கூடாது. "திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிடையே எழுதப்படாத ஒரு கூட்டணி, ஒப்பந்தம் உள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மற்றவர்களை உள்ளே விடக் கூடாது என்பதுதான் அந்த ஒப்பந் தம்," என்றார் முத்தரசன்.

இந்த முறை திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக அணி உருவாகி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவுவதாக ஊடகங்கள் கூறுவதை ஏற்க இயலாது என்றார். "திமுக தலைவர் கருணாநிதி தனது பிரசாரத்தில் தோழமை கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார். அவர் ஏதோ மறதியில் சொல்லியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். அவரும் மாற்றம் வேண்டும் என் கிறார். நாமும் மாற்றம்தான் வேண் டும் என்கிறோம். "அவர் கேட்பது அதிமுகவுக்கு பதிலாக திமுக என்னும் மாற்றம். நாம் கேட்பது இருவருமே ஆட்சிக்கு வரக்கூடாது என்னும் மாற்றம்," என்றார் முத்தரசன். தேர்தலில் இருமுனை போட்டி மட்டுமே நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சிக்கு தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி முடிவு கட்டும் என்றார். தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!