ஆண்களின் தூய்மைக்கு அளவுகோல் என்ன?

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக் கோயிலில் பெண்கள் ஏன் அனுமதிக்கப்படு வதில்லை என்பது தொடர்பான வழக்கில் ஆண்களின் தூய்மைக்கு அளவுகோல் என்ன என்று நீதி மன்றம் கேள்வியெழுப்பியிருக் கிறது. இயற்கை நியதிகளில் ஒன்றான மாதவிலக்கை அடிப்படையாக வைத்து பெண்களின் தூய்மை மதிப்பிடப்படுகிறது என்றால் ஆண்களுக்குள்ள கடப்பாடு என்ன என்றும் அது கேட்டது. உலகின் பிரபலமான சபரி மலைக்கோயிலுக்குள் பத்து வயது முதல் ஐம்பது வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி யில்லை.

இதனை முன்னிட்டு இந்திய இளம் வழக்கறிஞர் சங்கம் சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத் தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் சபரிமலைக் கோயிலுக்குள் பெண்களும் நுழை வதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந் தது. சென்ற திங்கட்கிழமை அன்று தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இந்த மனு விசார ணைக்கு வந்தபோதுதான் நீதி பதிகள் இப்படி சரமாரியாகக் கேள்வி கேட்டனர்.

சபரிமலைக் கோயில் நிர்வாகம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கே. கே. வேணுகோபால், ஆண், பெண் என்ற பாகுபாட்டால் பெண் களுக்கு அனுமதி மறுக்கப்பட வில்லை என்று விளக்கினார். "மாதவிலக்குக் காரணமாக குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் 41 நாட்கள் உடல் தூய்மையைப் பராமரிக்க முடியாது. இதனால் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி யில்லை," என்றார் அவர். இதற்கு நீதிபதிகள், மாத விலக்கால் பெண்கள் தூய்மை யில்லை என்றால் ஆண்களின் தூய்மை எப்படி மதிப்பிடப்படுகிறது. இதை அரசியல் சட்டம் அனு மதிக்கிறதா என்று பதில் கேள்வி கேட்டனர்.

சபரிமலைக் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்து நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!