ஜெயா ரூ.113 கோடி; கருணாநிதி ரூ.70 கோடி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக் கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி தலைவர்களும் அரசியல் கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆர். கே. நகரில் போட்டியிடும் அதிமுக தலைவி ஜெயலலிதா, திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்பு மணி ராமதாஸ் ஆகியோரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைப்படி வேட்பு மனுவுடன் சொத்து விவரங் களை வேட்பாளர்கள் வெளியிட வேண்டும். இதன்படி ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி.

இதில் அசையும் சொத்து களின் மதிப்பு ரூ. 41.63 கோடி என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 76.96 கோடி என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ரூ. 2.04 கோடிக்கு கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளில் அம்பாசிடர், மகிந்திரா ஜீப், மகிந்திரா பொலெரோ, டெம்போ டிராவெல் லர், சுவராஜ் மாஸ்டா மேக்ஸி, காண்டெசா, டெம்போ டிராக்ஸ், இரண்டு டொயோட்டா ஆகிய வாகனங்களும் அடங்கும். திமுக தலைவர் கருணாநிதி தம்மிடம் உள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.13.42 கோடி என்றும் முதல் மனைவி தயாளு அம் மாளின் சொத்து மதிப்பு ரூ. 15 கோடி என்றும் இரண்டாவது மனைவி ராஜாத்தி அம்மாளின் சொத்து மதிப்பு ரூ. 42 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!