திருமணம் போல தேர்தலுக்கும் அழைப்பிதழ்

'மக்கள் பாதை மதுரை மாவட்டம்' அமைப்பைச் சேர்ந்த 250 இளை யர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து புதுமையான முறையில் தமிழக மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். திருமண அழைப்பிதழ்போல் அச்சடித்து அதை வீதிவீதியாக, வீடுவீடாகச் சென்று பொதுமக்க ளைச் சந்தித்து வாக்களிக்க வரு மாறு அவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். அவர்களுடைய தேர்தல் திரு விழா அழைப்பிதழில் திருமண அழைப்பிதழில் உள்ளதுபோல் நாள், கிழமை, நேரம், இடம் ஆகி யவை குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த அழைப்பிதழில், தமிழ் நாட்டில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்கள் சுற்றம்சூழ வருகை தந்து விலைமதிப்பில்லாத தங்கள் வாக்கை மனசாட்சிப்படி பணம் வாங்காமல் பதிவுசெய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி அந்த அமைப்பைச் சேர்ந்த திரு சார்ல்ஸ் செல்வராஜ் கூறுகையில், "குழந்தைகள் 100% மதிப்பெண் எடுத்தால் பெற்றோருக்குப் பெருமை. அது போல், 100% வாக்குப்பதிவு நடந் தால் தமிழ்நாட்டிற்குப் பெருமை. சாதாரணமாகச் சொல்வதைவிட அழைப்பிதழ் அச்சடித்து தேர்தல் விழிப்புணர்வு செய்வதன்மூலம் அது மக்களிடம் எளிதில் சென்ற டைகிறது. முதற்கட்டமாக 10,000 அழைப்பிதழ்கள் அச்சடித்து வழங் கியுள்ளோம். யாருக்கு வேண்டு மானாலும், அதே நேரத்தில் நேர் மையாகவும் தவறாமலும் வாக்க ளிக்கும்படி வலியுறுத்தி வருகி றோம்," என்று தெரிவித்தார்.

வெற்றிலை, பாக்குடன் தேர்தல் அழைப்பிதழைக் கொடுத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவறாது வாக்களிக்கும்படி பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் 'மக்கள் பாதை' அமைப்பினர். படம்: தி இந்து

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!