கருத்துக்கணிப்பு: கட்சிகள் திடீர் எதிர்ப்பு

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும் நாளில் இருந்தே அச்சு, காட்சி ஊடகங் கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடைவிதிக்க வேண் டும் என தேமுதிக வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், பல கட்சிகள் இதே நிலைப்பாட்டை கொண்டிருப் பதாக அரசியல் கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் செயல்படும் பல் வேறு தொலைக்காட்சி நிறுவனங் களும் ஏதோ ஒரு வகையில் அரசியல் கட்சிகளுடன் நேரடியா கவோ மறைமுகமாகவோ தொடர் பில் உள்ளன. எனவே தாங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிக ளுக்கு சாதகமாக மட்டுமே அந் நிறுவனங்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

எனவே தேர்தல் சமயத்தில் அத்தொலைக்காட்சி அலைவரிசை களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளும் ஒருதரப்புக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக அரசியல் நிபுணர்களும் கருது கின்றனர். இந்நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக மனு அளித்துள்ளது தேமுதிக. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அளித் துள்ள மனுவில் பல்வேறு ஊட கங்கள் தங்களுக்கு ஆதரவான கட்சிகள் குறித்து மக்களிடம் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைத் திணிப் பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் இதுபோன்ற நிலைப்பாடு மக்களை குழப்பம் அடையச் செய்யும் அளவிற்கு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தேமுதிக, இதனால் உடனடியாக கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!