பேருந்தில் கொண்டு வந்த ரூ.50 லட்சம் பறிமுதல்

மதுரை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தில் சோதனையிட்டபோது ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக் காளர்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க பணம் விநியோகிப் படுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற் கொண்டு வருகிறது.

அனுமதியின்றியும் உரிய ஆவணங்கள் இன்றியும் அதிக ளவில் கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம், நகைகள் ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்கின்றனர். இதன் மூலம் பல கோடி ரூபாய் ரொக்கமும் நகையும் இதர பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய அளவில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட் டியே மிக அதிகளவில் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்தில் வந்த தங்கு விடுதி ஊழியரிடமிருந்து ரூ.50 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!