அன்புமணி: திருட்டுக் கதாநாயகன் அறிக்கை

மதுரை: பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்த பாமக முதல்வர் வேட்பாளர் அன்பு மணி ராமதாஸ் அங்கு செய்தி யாளர்களிடம் பேசினார். "அதிமுகவும் திமுகவும் மக்க ளிடம் பொய்களைக் கூறி பிரசாரம் செய்து வருகின்றன. அதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார் கள். திமுக எங்களைக் காப்பி யடித்துத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது. கருணாநிதி மதுவிலக்குக் குறித்து முன்னுக் குப் பின் முரணாகப் பேசி வரு கிறார். சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையே கதாநாயகன் என்று கூறுகிறார்கள். ஆனால் அது திருட்டுக் கதாநாயகன். எங்கள் தேர்தல் அறிக் கையைத் திருடி அவர்கள் தேர்தல் அறிக்கையாகத் தயாரித்து உள்ளனர். அதில் புதிதாக எதுவும் இல்லை," என்று அன்புமணி ராமதாஸ் சொன்னார்.

"ஐம்பது ஆண்டுகளாக எதுவும் செய்யாத அதிமுக, திமுக கட்சிகள் தற்போது என்ன செய்யப்போகிறது. தமிழகத்தில் மாற்றத்தை பாமகவால்தான் தர முடியும். விஜயகாந்த் உடல் நிலை சரியில்லை என்றால் அவர் பேசாமல் இருப்பது நல்லது. அதற் காக மக்களைக் குழப்பும் முயற் சியில் ஈடுபடக்கூடாது. பாமக ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஆண்டே ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் அன்புமணி கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!