வேட்பு மனுத் தாக்கல் முடிந்தது

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முடிவடைந்தது. அடுத்த மாதம் 16ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறு கிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் 6வது நாளான நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதிமுக, திமுக, தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் நேற்று பெரும்பாலும் சுயேச்சை வேட்பாளர்களே மனுக்களை சமர்பித்தனர்.

அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களின் மாற்று வேட்பாளர்களும் நேற்று வேட்புமனு கொடுத்தனர். இதற்கிடையே ஏற்கெனவே மனு கொடுத்தவர்களும் நேற்றுத் தேவையான ஆவணங்களை சமர் பித்தனர். இன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற் கான கடைசி நாளான மே 2ஆம் தேதி அன்றே 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!